
கடந்த வாரம் கீழக்கரையில் ஆம்புலன்ஸ் சேவையின் லட்ச்சனத்தை ” டப்பாவான ஆம்புலன்ஸ்” என்ற கட்டுரையில் கீழை முரசு விளித்து எழுதி இருந்தது, அதன் நோக்கமே அதில் சம்பந்தப்பட்டவர்கள் வினை செய்யவேண்டும் என்பதே, கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு நேற்று கீழக்கரையில் இரண்டு உயிர்கள் பலிகிடாவாக்கப்பட்டிருக்கிறது, என்ன நடந்தது? செல்வராஜ் மேஸ்த்திரி, கிழக்குத் தெருவில் எல்லாரும் அறிந்த ”கட்டிட கொத்தனார்” , புதுக்கிழக்கு தெரு பகுதியில் நேற்று கட்டுமான பனியில் ஈடுபட்டிருந்த போது “எதிர்பாராத இடிபாட்டில்” சிக்கி படுகாயமடந்து இருக்கிறார், அவருடன் ஒரு கூலித் தொழிலாளியும் காயம்பட்டு மோசமான நிலையில் இருந்திருக்கிறார்.
ஒரு குறிப்பிட ஆம்புலன்ஸை அழைத்து இருக்கிறார்கள் ‘ இதோ வருகிறோம், அதோ அங்கே வந்து விட்டோம் என்று ரீல் விட்டு இருந்து இருக்கிறார்கள், பின் சரியாக 1 மனி நேரம் கடந்த பின் “ வண்டி பஞ்சர்” என்ற பதில் வந்திருக்கிறது, பிறகு 108 ஆம்புலன்ஸை அழைத்து அதுவும் வருவதற்கு கனிசமான நேரத்தை எடுத்திருக்கிறது, காலதாமதத்தால் கூலித் தொழிலாளி இறந்துவிட்டார், உயிர் ஊசலாட மதுரைக்கு எடுத்து செல்லப்பட்ட செல்வராஜ் மேஸ்த்திரி இன்று பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார். இது போல் இன்னொருவரை கொன்று இரத்த ருசி பார்க்கும் முன் செயலில் இறங்குவார்களா?





5 comments:
ஆம்புலன்ஸ் இன் மோசமான சேவையின் விலைவிதான் இது
Shahul Hameed.M
மக்களே ஆம்புலன்ஸ் வரும் வரை காத்து இருக்க வேண்டும் என்று ஏதேனும் சட்டம் இருக்கின்றதா. ஆம்புலன்ஸை குறை கூரும் நாம் ஏதேனும் ஒரு வாகனத்தில் அவர்களை மருத்துவமணைக்கு அலைத்து சென்று இருந்தால் இரண்டு உயிர் இன்று பிரிந்து இருக்காது. கீழைக்கரையில் வாகனத்திற்கா பஞ்சம். நம்மிடம் உதவும் மணப்பன்மை இல்லை என்பதுதன் உன்மை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தவறு இல்லை என்று நான் கூரவில்லை. ஆம்புலன்ஸிற்க்காக காத்திருந்த அந்த ஒரு மணி நேரம்தான் அவர்கள் உயிர் பிறிய காரணம் என்றால் அதற்கு நாமும் ஒரு காரணம்தான். இதை நாம் மாற்ற வேண்டும். இது எனது தாழ்மையான கருத்து.
sammantha patta ambulance nirvagathidam visaarikkamal seythi veli iduvathu yentha vagayil niyayam. yaro sollum seythikku thaan mukkiyathuvam yenral,yetharku intha keezhai murasu.
unmai seythiyai veli idungal, illaiyendral bathil solla vendum ALLAH vidam.
ambulance nirvagathidam visaarikaamal seythi veli iduvathu
muraiyatra seyal.unmai seythiyay visaarithu veli idumaaru kettukolkiren.
ambulance nirvagathidam visaarikkamal seythi veli iduvathu muraiyatra seyal. unmai seythiyay mattum veli idumaaru kettukolkiren
Post a Comment