Subscribe:

Tuesday, 7 February 2012

ஊழல் பெருச்சாளியான கீழக்கரை வி.ஏ.ஓ முருகேசுவின் கடைந்தெடுத்த களவாணித்தனம்....


கீழக்கரையில குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கிறது, வாருகாலு உடைந்து சாக்கடைகள் பெருக்கெடுத்து ஓடுது, ஊருக்குள்ளேயே நுழைய முடியவில்லை, நாத்தம் குடல புடுங்குது... என காட்டுக் கத்தல் விடும் நம்ம மக்கள் இதையெல்லாம் விட நாற்றமெடுக்கும் நம்ம ஊருல இருக்குற ஊழல் நதியின் ஊற்றுமூலமான அரசு அலுவலகங்களை பற்றி ஒன்னுமே பேசுவதில்லை. அந்த ஊழல் ஊற்றிலிருந்து வழிந்தோடும் நாற்றமெடுக்கும் சாக்கடையான கீழக்கரை வீ.ஏ.ஓ முருகேசனை பற்றி அறிவார்களா? மக்களை சுரண்டி பிழைக்கும் இந்த முருகேசன் தான் கீழக்கரையில் முதன்முதலில் தூர்வாற வேண்டிய சாக்கடை. எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கி நாளொரு மேனியும், பொழுதொறு வண்ணமுமாய் உப்பிப் பெருக்கும் இந்த பெருச்சாளியால் அன்றாடம் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதை எவரும் ஏறிட்டுப்பார்ப்பதில்லை. கொடுத்து சிவந்த கையல்லவா கீழக்கரை மக்களின் கைகள்!




கொஞ்சம் காலமா இந்த ஊழல் பெருச்சாளி பன்னும் அடாவடிக்கும், அட்டூழியத்திற்கும் வரையறையே இல்லை, மாற்றுத் திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தில் பயனடைபவர்களுக்கு ரூ. 2000, விதவைகள் உதவித்திட்டத்தில் மாதத் தொகை பெறுபவர்கள் மொதல் மாசம் தொகை ரூ 1000 த்தை அய்யாவுக்கு காணிக்கை கொடுக்கனுமாம், பாஸ்போர்ட் வெர்ஃபிகேசனுக்கு போலீஸ்ல கேட்கிற அட்ரஸ் ப்ரூஃபுக்கு ரூ 200 , சாதி சான்றிதழ் மாதிரி பெரிய மேட்டருக்கு ரூ 5000 என தனி தனியா இந்த களவாணி ரேட்டு வச்சிருக்கிறதா தலையாரிதான் சொல்றாரு... கீழக்கரைக்கு வந்து ஒரு , இரண்டு வருஷம்தான் இருக்குமாம், பேனாவை எடுத்தாத்தான் வேலை நடக்கும், ஆனால் இவர் கையில மீட்டர் வந்தாதான் மேட்டர் நடக்குமாம். .




தாலி அறுத்த பொம்பளைக்கு கிடைக்குற பனத்திலயும், குருடு, செவிடுங்களுக்கு அரசாங்கம் கொடுக்குற உதவிகளிலும் அன்றாடம் தன் கடமைகளை செய்வதற்கும் லஞ்சம் வாங்கும் இது போன்ற ஈனப்பிறவிகளின் பினத்தை ஈ கூட மொய்க்குமா எனபது சந்தேகமே, இந்தியன் தாத்தா மாதிரி யாராவது ஒருத்தர் வந்தாத்தான் இவரு அடங்குவாருன்னும புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இரண்டு இளைஞர்கள் பேசிக்கிட்டாங்க. இந்த பெருச்சாளி அரசாங்கத்தின் வலையில மாட்டுமா அல்லது இதோட பொந்து இன்னும் பெருசாகிகிட்டே போகுமான்னு பொறுத்திருந்து பார்ப்போமே!

No comments:

Post a Comment