Subscribe:

Friday, 20 January 2012

கீழைமுரசில் வெளிவந்த ஆம்புலன்ஸ் செய்தி – பிட் நோட்டீஸாக விநியோகம்...

சமூக அக்கரை கொண்ட கீழக்கரை பொதுமக்களில் சிலர் நம் கீழைமுரசில் வெளிவந்த ஆம்புலன்ஸ் செய்தியை இன்று 20.01.2012 வெள்ளிக்கிழமை குத்பாவிற்கு பின் பிட் நோட்டிஸ் வடிவில் மக்களுக்கு விநியோகித்தார்கள். கீழைமுரசின் சார்பில் அந்த தோழர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday, 19 January 2012

ஆம்புலன்ஸ் விவகாரம் – பலிகடாவான செல்வராஜ் மேஸ்த்திரி…





கடந்த வாரம் கீழக்கரையில் ஆம்புலன்ஸ் சேவையின் லட்ச்சனத்தை ” டப்பாவான ஆம்புலன்ஸ்” என்ற கட்டுரையில் கீழை முரசு விளித்து எழுதி இருந்தது, அதன் நோக்கமே அதில் சம்பந்தப்பட்டவர்கள் வினை செய்யவேண்டும் என்பதே, கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு நேற்று கீழக்கரையில் இரண்டு உயிர்கள் பலிகிடாவாக்கப்பட்டிருக்கிறது, என்ன நடந்தது? செல்வராஜ் மேஸ்த்திரி, கிழக்குத் தெருவில் எல்லாரும் அறிந்த ”கட்டிட கொத்தனார்” , புதுக்கிழக்கு தெரு பகுதியில் நேற்று கட்டுமான பனியில் ஈடுபட்டிருந்த போது “எதிர்பாராத இடிபாட்டில்” சிக்கி படுகாயமடந்து இருக்கிறார், அவருடன் ஒரு கூலித் தொழிலாளியும் காயம்பட்டு மோசமான நிலையில் இருந்திருக்கிறார்.




ஒரு குறிப்பிட ஆம்புலன்ஸை அழைத்து இருக்கிறார்கள் ‘ இதோ வருகிறோம், அதோ அங்கே வந்து விட்டோம் என்று ரீல் விட்டு இருந்து இருக்கிறார்கள், பின் சரியாக 1 மனி நேரம் கடந்த பின் “ வண்டி பஞ்சர்” என்ற பதில் வந்திருக்கிறது, பிறகு 108 ஆம்புலன்ஸை அழைத்து அதுவும் வருவதற்கு கனிசமான நேரத்தை எடுத்திருக்கிறது, காலதாமதத்தால் கூலித் தொழிலாளி இறந்துவிட்டார், உயிர் ஊசலாட மதுரைக்கு எடுத்து செல்லப்பட்ட செல்வராஜ் மேஸ்த்திரி இன்று பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார். இது போல் இன்னொருவரை கொன்று இரத்த ருசி பார்க்கும் முன் செயலில் இறங்குவார்களா?

Tuesday, 17 January 2012

கீழக்கரையில் ரியல் எஸ்டேட் : புரோக்கர்கள் போதைக்கு மக்கள் ஊறுகாயா?



புதுசா முளைச்ச சில ரியல் எஸ்டேட் புரொக்கர்கள் செம மப்புல இருக்காங்க, முதலில்லாமல் தொழில் செய்ய வேண்டுமா? வாருங்கள் கீழக்கரைக்குன்னு விளம்பரம் மட்டும்தான் கொடுக்க வேண்டியது பாக்கி…. அஞ்சு காசு முதலில்லாமல் அலப்பறையா கிளம்பிடுச்சு இந்த புற்றீசல் கூட்டம், சாதாரன லாத்தாமார்களும், காக்காமார்களும் நாண்டுகிட்டு நிக்கப்போற காலம் ஒன்னும் வெகு தொலைவில் இல்லைங்க.



சமீப காலமாக பெருகி வரும் சில தரகர்களின் அடாவடிக்கு அளவும் இல்லை, அளவு கோல் வைக்க யாரும் முன்வரவும் இல்லை, செல்வத்தில் திளைப்பவர்கள் புத்திசாலிகள், கீழக்கரையில் தென்னையும், பனையுமான இடத்தில் முதலீடு செய்யவே முனவருவதில்லை, வளைகுடாவில் கசக்கி பிழியப்படும் மிடில் கிளாஸ் ஆளுங்கள்தான் இவர்கள் டார்கெட், கடன உடன வாங்கி இடத்தை வாங்கிப்போடு பின்னாடி உதவும் என்ற கரிசன வார்த்தைகளை முற்படுத்தி சுத்தமா முழுக வைப்பதே இந்த தரகர்களின் தந்திரம் ,இது அயோக்கியத்தனம் இல்லையா?



ஒரு காலத்தில் மஞ்ச பையோடு, எளிமையும் , கடமையுமா இருந்த குறிப்பிட்ட புரோக்கர்கள் மவுசு குறைஞ்சி நடு வீதியில நிக்கிறாங்க, அவங்க பாதுக்கத்த நம்பிக்கையும் நட்ட நடுவுல அம்மனமாத்தான் இருக்குது.


கோலு அஞ்சாயிரத்துக்கும் , பத்தாயிரத்துக்கும் வித்த நிலமெல்லாம் இப்போ 1 இலட்சம், 2 இலட்சம்னு நம்ம தலை கிர்ருன்னு சுத்த உச்சில போய் நிக்குது, வெறுங் கையோட பொழப்பு பார்க்க வந்த புரோக்கர்மாருங்க “ விலை நிர்னயம்” பன்னுற அதிகார வர்க்கமா ஆகிட்டாங்க, 10 பேர் தரகு பன்ன வேண்டிய இடத்துல 5000 பேர் இருந்தா மசு.... விளங்கும்,? இப்படித்தான் கடந்த காலங்களில் பல வியாபாரங்களை ஒன்னுமில்லாம ஆக்கி ஏராளமான குடும்பத்தின் வயித்துல சுட்டாங்க. 5 கோலு வீட்டுமனை வாங்க முடியாம சாமான்ய கீழக்கரைக்காரனை தெருவுல பிச்சையெடுக்க வைக்க முடிவு செய்யபோறாங்க, அதுவும் முடியாதவன் தூக்கில தொங்குறத விட என்னங்க செய்ய முடியும்.
ஒன்னுக்கும் உதவாத இடத்தையெல்லாம் காட்டி 5 லட்சம் 10 லடசம் கொடுத்து வாங்க வச்சி பல குடும்பங்களை அழிவுக்கு இழுத்து செல்லும் இந்த ரியல் எஸ்டேட் தரகர்களின் நெட்வொர்க்கை சீர்படுத்தவோ அல்லது புரோக்கர்களின் வலையில் சிக்கி அவர்களின் போதைக்கு ஊறுகாய் ஆகிற மக்களை காப்பாற்ற வேண்டுமென்றோ இதுவரை எந்த இயக்கமும், கோரவில்லை இவை குறித்துக் கவலைப்பட்டதுமில்லை. இப்போது சில ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆடம்பர வாழ்வின் செலவை மக்களின் தலையில் கட்டுபவர்களுக்கு கடிவாளம் கட்ட இனி ஒருத்தரு பொறந்துதான் வரனும் போல இருக்கு. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…..ன்னு பாடத் தோணுதா?

Wednesday, 11 January 2012

டப்பாவான ஆம்புலன்ஸும் - காத்துக்கிடக்கும் சடலங்களும்.



கீழக்கரையில் கோமான்களிடம் வசூலித்த பணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டி நாதியற்ற நிலையில் டப்பாவாகி நாலுமாசம் ஒர்க்‌ஷாப்பில் கிடக்கிறதாம், மையத்துக்கு ஆம்புலன்ஸ் இலவசம் என்ற ஸ்லோகனுடன் ஊரை வலம் வந்த இந்த வண்டிக்கு இப்போ பாடைதான் கட்ட வேண்டும், இயக்கத்தை வளர்க்கிறோம், புதுசா சங்கம் ஆரம்பிக்கிறோம் என்று காசு வசூலிப்பதிலேயே குறியாக இருக்கும் சில சமூக சேவகர்கள் இந்த ஆம்புலன்சை பராமரிக்காமல் அடுத்த ஆம்புலன்ஸ் வாங்க காசு கேட்டு ஆட்டைய போட கிளம்பிவிட்டார்கள்.


சமீபத்தில் ஜனாசாவுக்கும், சில எமர்ஜன்ஸி கேசுகளுக்கும் ஆம்புலன்ஸ் வண்டி கேட்டும் கிடைக்காமல் சடலங்கள் காத்துக்கிடந்த்தாம். பொறந்த ஊருக்கு ஏதாவது செய்யனும் என்ற சேவை நோக்கத்தில் காசை அள்ளிக் கொடுக்கும் செல்வந்தர்கள் பணத்தில் வாங்கப்படும் இந்த வண்டிகளை பாதுகாத்து பராமரிக்க வக்கற்று தான் சார்ந்த இயக்கத்துக்கும் சாவு மணி அடித்துக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது ? இந்த கடைந்தெடுத்த அயோகியத்தனதுக்கு எல்லை இல்லையா?


இனி இவர்களை நம்பி எந்த சடலமும் , எந்த அவசர கேசும் காத்துக்கிடக்கும் கூத்து அரங்கேற்றப்படக் கூடாது, கீழக்கரையின் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் ஒரு ஆம்புலண்சஸ் வாங்கி மக்களின் தேவைக்கு பயன்படுத்தலாம் , அதுவே நிரந்தர தீர்வாக இருக்கும். காசு வசூலிக்க கிளம்புவர்கள் ஆப்பு வாங்க தயாராக இருக்கட்டும்.

Friday, 6 January 2012

கலாச்சார சீரழிவை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி - ஜமாத்துக்களுடன் இனைந்து புரட்சிகர திட்டம்.



மெல்லக் கொல்லும் விஷமாய் மாறிவரும் கலாச்சார சீரழிவினை நாம் ஈஸியாக எடுத்துக் கொள்ள பழகி ரெம்ப காலமாகி விட்டது, நமது முண்ணோர்கள் கால காலமாய் பாதுகாத்துவந்த நம் கலாச்சார, பண்பாடுகளை காற்றிலே பறக்கவிட்ட சமூகமாக நாம் வாழ்கிறோம், சிதைக்கப்பட்ட இந்த நம் கலாச்சாரம் மீள்பெறுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகி விட்டது, ஒரு சமூகத்தின் வீழ்ச்சி என்பது அந்த சமூகத்தின் கலாச்சார சீரழிவின் உச்சதில் இருக்கிறது, ஜமாஅத்துக்களின் கட்டுப்பாட்டினை மீறி வரும் சமீபத்திய சம்பவங்கள் பத்திரிக்கை செய்திகளாய் நம் சமூகத்தை கேவலப்படுத்தி வருவதை காண்கிறோம், முத்துப்பேட்டையிலும், காயல்பட்டினத்திலும் இத்தகைய பஞ்சாயத்துக்கள் ஜமா அத்துக்குள்ளேயே செட்டில் செய்யப்படும் பொழுது நம்மால் ஏன் முடிய வில்லை?
வீழ்ச்சி அடைந்து வரும் நமது பண்டைய கலாச்சார மதிப்பினை நிலை கொள்ள வைக்கும் முகமாக புரட்சிகர திட்டத்துடன் சில இளைஞர்கள் அனைத்து ஜமா அத்துகளுடனும் ஆலோசித்து வருகிறார்கள், த.மு.மு.க, எஸ்.டி.பி.ஐ. முஸ்லீம் லீக், கே.எம்.எஸ் போன்ற இயக்கங்கள் ஒன்றாய் இனைந்து ஜமாஅத்துக்களுடன் பேசிவருகிறார்கள், குறிப்பாக, முன்னள் த.மு,மு,க மாவட்ட பொருளாளர் முஜீப், முன்னாள் த.மு.மு.க நகர தலைவர் முஹம்மது ஹூசைன், கண்மனி அலி, சேட்டு, சாலை தெரு சீனி மற்றும் புகாரி ஆகியோர் இதில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.

நமது முன்னோர்களால் கட்டிக்காத்து வளர்க்கப்பட்டு வந்த நம் பண்பாட்டு விழுமியங்கள் தொடர்ந்து வரும் நம் சந்ததிக்கும் பேணிக்காத்து வழங்க கீழக்கரை மக்கள் ஆதரவளிக்க வேண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபட நாம் அனைவரும் முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Wednesday, 4 January 2012

கீழக்கரையில் 6 மணி நேர மின் வெட்டு - ஒரு சாபக்கேடா?


கடந்த ஆட்சி கானாமல் போனதற்கு மின் வெட்டும் ஒரு காரனமாக சொல்லப்பட்டது, இந்தா.. ”மே” ல சரியாகிடும் “ ஜூன்” ல சரியாகிடும்னு ஆற்காடு வீராசாமி மக்களின் நெஞ்சில குத்துனாரு, மக்களும் கடந்த தேர்தல்ல அவங்கள ஸ்ட்ராங்கா குத்தி ஓரமா உட்கார வச்சுட்டாங்க, ஆனாலும் ஒரு புன்னியம் செஞ்சாங்க, டைமை சொல்லி கரண்ட கட் பண்ணினாங்க, நகர்புரத்துல மின்வெட்டின் பாதிப்பு அவ்வளவா இல்லை, மற்ற பகுதிகளில 2 ல் இருந்து 4 மனி நேரம் கணக்கா பார்த்து மின் வெட்டு இருந்துச்சு. இப்போ என்ன நடக்குது?


கீழக்கரையில கரண்டு புழக்கம் ஜாஸ்திங்க, 10 வீட்டுக்கு ஒரு வீட்டுல ஏ.சி இருக்கு, 100 க்கு 75 % வீட்டுல ஃப்ரிட்ஜ், மிக்ஸின்னு ஹெவி டூட்டி ஐட்டங்கள் இறைந்து கிடக்குது, கட்டுமானப் பணி எப்பொழுதும் நடந்துக்கிட்டே இருக்கும், ஊரோட கரண்டு தேவைக்கு ஒரு ராட்சத சப் ஸ்டேசன் வச்சா கூட அதில சேமிச்ச கரண்ட நம்ம ஊரு அள்ளி முழுங்கி ஏப்பம் விட்டுடும். நல்ல வேளைங்க… இந்த யூ.பி. எஸ். ஸ கண்டுபுடிச்சானுங்க, அவனுக்கு நோபல் பரிசு மாதிரி ஏதாவது கொடுத்தே ஆகனும், இல்லைன்னா பச்சிளங் குழந்தைகளும், பள்ளிக்கு போற பிள்ளைகளும் நோயாளிகளிம், காத்து இல்லாம தூக்கம்வராதவர்களின் பாடு படு திண்டாட்டம்தான். சரி ஆட்சிதான் மாறிடுச்சு ஏதாவது முண்ணேற்றம் இருக்கும்னு பார்த்தா, உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா கதையா இந்த மின்வாரியமும், ஆட்சியாளர்களும் முதுகில குத்துராங்க…. முன்பாவது சொல்லிட்டு கரண்ட எடுத்தான், இப்ப என்னங்க… சொல்லாமலேயே எடுக்கிறானுங்க, 2 மனி நேரம் 6 மனி நேரமாகிடுச்சு, பேசாமல் கிரைண்டர் , மிக்ஸிக்கு பதிலா இலவசமா அந்த யூ.பி. எஸ் யும், ஒரு எக்ஸைட் பேட்டரியும் வாங்கி கொடுத்தா… அத மாட்டிட்டா கரண்டு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு தெரியாதுல்ல, அப்புறம் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்ல பாருங்க.


சரி நம்ம பக்கத்துல்ல கூடங்குளம் இருக்கு அனு உலை செயல்பட்டுச்சுன்னா கரண்டு 24 மனி நேரமும் அருவியா கொட்டும்னு சொல்றங்கன்னு பார்த்தா அங்க கூடுற கூட்டத்தையும், எழுச்சியையும் பார்த்தால், நம்ம தலைமுறைல அது வராது போல இருக்கு, அத விடுங்க, கீழக்கரைல 6 மனி நேர மின் வெட்டை இன்ஸ்டால்மெண்ட் முறையில் எடுத்து மக்கள் முதுகுல குத்துற மின்வாரியத்தை என்ன சொல்வது, மின்வெட்டு நம்ம ஊருக்கு ஒரு சாபக்கேடாகவே இருக்கு, எங்க தப்பு நடக்குது ? மிச்சம் புடிக்கிற 4 மனி நேர கரண்டை வச்சு எவன் தாலிய அறுக்கப் போறாங்க? அய்யா நத்தம் விஸ்வனாதன் தலையிட்டு ஏதாவது செஞ்சாத்தான் உண்டு, கீழக்கரை மின்வெட்டு சாபக்கேட்டுக்கு விமோச்சனம் கிடைக்குமா? இதுதான் சாதாரன கீழக்கரைவாசியின் குழப்பமான கேள்வியா இருக்கு .

Monday, 2 January 2012

கீழக்கரையில் ஆட்டுக்கறி விலையேற்றம் - டிசம்பர் கொள்ளை








வருடம் முழுதும் காய்ந்து போய்க்கிடக்கும் கீழக்கரை டிசம்பரில் கொண்டாட்டத்துக்கு தயாராகிவிடும், செல்வந்தர்களின் வருகை,திருமண கொண்டாட்டங்கள் என ஊரின் வடிவே மாறிவிடுவது உண்டு, திருமண விழாக்களுக்கு விஜயம் செய்பவர்கள் மகிழ்ச்சியடைகிறார்களோ இல்லையோ, ஊரில் கறி வியாபாரம் செய்பவர்க்ள் குதுகலிப்பின் எல்லைக்கு சென்றுவிடுகிறார்கள், நவம்பர் மாதமே இந்த கறிக்கடைகாரர்கள் எல்லாம் கூட்டாய் சேர்ந்து மக்களை சூறையாட தயாராகிவிடுகிறார்கள், செம்மறி ஆடுகளை அடிமாட்டு விலைக்கு வாங்க லாரியை அமர்த்திக்கொண்டு பன்ருட்டி, விழுப்புரம் என அலைந்து திரிய இந்த கொள்ளைக்கூட்டம் எல்லை தாண்டி ஓடுகிறது.

15 நாட்களில் 70 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் பிஸினஸ் என்றால் சும்மாவா? பக்கத்து ஊரான ஏர்வாடியில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 300 ரூபாயாக இருக்கும், இங்கு மட்டும் கிலோ 400 ருபாயாகி விலையேற்றம் ஆட்டுக் கொம்பில் போய் உட்கார்ந்து கொள்ளும், வருடம் வருடம் இந்த சூறையாடல் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு யாரை காரணம் சொல்வது? மக்களின் கழுத்தை நெறிக்கும் இவர்களுக்கு யார் சூடு போடுவது? இந்த விலையேற்ற விஷம் டிசம்பரின் பாதிப்பில் இருந்து வெளியே வர சில சமயம் ஏப்ரல், மே என்று கூட ஆகிவிடும.ஊரை சூறையாடும் இவர்களை ஒடுக்க மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்குள் இந்த கொள்ளையர்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்ப்ள்ளி வைக்க அரசு முன்வர வேண்டும். (மேலே கொடுக்கப்பட்ட படத்தில் இருப்பவர்களை நம் செய்தி குறிப்பிடவில்லை)

Sunday, 1 January 2012

கலாச்சார சீரழிவில் நாம் - எங்கே செல்கிறது இந்த சமூகம்?


கடந்த காலங்களிலும்,தற்போது நடக்கும் சம்பவங்கள் எதை நமக்கு உணர்த்துகிறது?சமீபத்தில் கேரளாவின் பீமா பள்ளியில் முடிந்த விவகாரமும், கலப்பு திருமனம் செய்து, பச்சை குத்தி, பஞ்சாயத்தில் முடிந்த விவகாரமும் இன்னும் இந்த அவலங்களை கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறது.சீரழிவின் உச்சத்தில் சமுதாய இளம் தலை முறையினரின் நடவடிக்கைகள் இருப்பதாகவே இந்த விஷயங்கள் நம்பப்படுகிறது, செல் போன் மோகம் தலைவிரித்து ஆடி ஒரு வித பித்த நிலையின் பிரதிபலிப்பாகி வரும் காலம் இது, இதெ செல் போன் பலரது வாழ்க்கையை சீரழித்துள்ளது என்பது வேதனையான விஷயம். தவறான விஷயங்களை படம் பிடித்தல், ஆபாச படங்கள் பார்த்தல், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புதல்,செல்போன் சில்மிஷங்களில் ஈடுபடுதல் போன்றவற்றால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது

கடந்த வருடம் மனம் பதற வைக்கும் அந்த ஆடியோ கிளிப்பை கேட்டதன் விளைவாக, தூக்கம் தொலைத்து, மன உளைச்சல் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருந்தால் அந்த ஆடியோ கிளிப்பில் இடம் பெற்ற கான்வேர்ஷேசனின் ஆபாசத்தை நீங்கள் ஓரளவு உணரலாம்.

கடின உழைப்பாலும், சமூக கட்டுப்பாடுகளாலும்,இனிய உறவு முறையாலும், வாய்மையிலும், வாழ்ந்து காட்டிதலையும் உரமாக்கி உயர்ந்த நம் சமுதாய அரனை தகர்த்தெடுக்க சில விஷமிகள் முயன்று வருவதை விவேகத்துடன் அனுகா விடில் சீரழிவை மொத்தமாக அறுவடை செய்ய வேன்டியதுதான். இப்படியான ஒரு புல்லுருவியை ஆத்திரத்தில் தாக்கிய சில இளையவர்கள் சென்ற ஆட்சியில் காவல் துறையினரின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

இளம் தலை முறையினர் மார்க்க, அறிவியல், கலை கல்விகளில் சிறந்து விளங்கினாலும், எதார்த்த வாழ்க்கை கல்வியில் தேர்வு பெறாமலெயே இளம் வயதிலேயே தன் பாதையில் விஷச் செடிகளுக்கு நீர் வார்க்கும் செயலுக்கு தனனை அறியாமலே இடம் கொடுத்து விடுவது மிகக் கொடூரமான விஷயம்.

இன்றைய இளம் தலை முறையில் சமூக மதிப்புகள் வீழ்ச்சி அடைந்து சில ஆட்டொ டிரைவர்களும், மாருதி கார் ஒட்டும் சில சமூக விரோதிகளும் ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு உணரப்பட்டு, இத்தகைய கபோதிகளின் பக்குவப்பாடாத வசீகர பேச்சிற்கும், ஆபாசம் கல்ந்த சிறு மிரட்டல்களுக்கும், உரிமயுடையவன் போன்று பேசும் உள்ளூர் மொழி வழக்கிற்கும் கட்டுப்பட்டு, ஒரு பேதமை நிலையில் இதனை விரும்பி கேட்கும் ஒரு போதை நோயாளியின் மன நிலையில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் இளம் தலை முறையினரை இது போன்ற சிக்கலில் இருந்து மீட்டெடுக்கும் வழியிலும் சமூக கட்டமைப்புகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்காவிடில் எம் இளைய தலமுறையினரின் எதிர்கால வாழ்வு கேளிவிக்குறியதாகிவிடும் என்பது தெளிவான உணமை.

இந்த விஷயத்தில் பெற்றோர்களுடன், ஆசிரியர்களும், சமூக ஆர்வளர்களும், ஆன்மீக போதகர்களும், அரசும் சேர்ந்து ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபது மிக அவசியாமான ஒன்று. அளவுக்கு அதிகமான பாசமும், அதீத கண்டிப்பும், வாழக்கை கல்வியினை படிப்பிப்பதின் குறைபாடும், சமூக அக்கரையின்மையும், கலாச்சார மோகமும், அபரீத பண புழக்கம், மட்டரக மீடியா பொழுது போக்கு விஷயங்களும், அன்னிய ஆண்களூடான பழக்க வழக்கங்கள், செல் போன் மோகமும், சமூக நீதி,பண்பாடு, ஒழுக்க , விஷயங்களில் அறிவின்மையும், பெற்றோர்களின் கண்கானிப்பு குறைவு, என களை எடுக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு, விழித்தெழுமா சமூகம்?