
புதுசா முளைச்ச சில ரியல் எஸ்டேட் புரொக்கர்கள் செம மப்புல இருக்காங்க, முதலில்லாமல் தொழில் செய்ய வேண்டுமா? வாருங்கள் கீழக்கரைக்குன்னு விளம்பரம் மட்டும்தான் கொடுக்க வேண்டியது பாக்கி…. அஞ்சு காசு முதலில்லாமல் அலப்பறையா கிளம்பிடுச்சு இந்த புற்றீசல் கூட்டம், சாதாரன லாத்தாமார்களும், காக்காமார்களும் நாண்டுகிட்டு நிக்கப்போற காலம் ஒன்னும் வெகு தொலைவில் இல்லைங்க.
சமீப காலமாக பெருகி வரும் சில தரகர்களின் அடாவடிக்கு அளவும் இல்லை, அளவு கோல் வைக்க யாரும் முன்வரவும் இல்லை, செல்வத்தில் திளைப்பவர்கள் புத்திசாலிகள், கீழக்கரையில் தென்னையும், பனையுமான இடத்தில் முதலீடு செய்யவே முனவருவதில்லை, வளைகுடாவில் கசக்கி பிழியப்படும் மிடில் கிளாஸ் ஆளுங்கள்தான் இவர்கள் டார்கெட், கடன உடன வாங்கி இடத்தை வாங்கிப்போடு பின்னாடி உதவும் என்ற கரிசன வார்த்தைகளை முற்படுத்தி சுத்தமா முழுக வைப்பதே இந்த தரகர்களின் தந்திரம் ,இது அயோக்கியத்தனம் இல்லையா?
ஒரு காலத்தில் மஞ்ச பையோடு, எளிமையும் , கடமையுமா இருந்த குறிப்பிட்ட புரோக்கர்கள் மவுசு குறைஞ்சி நடு வீதியில நிக்கிறாங்க, அவங்க பாதுக்கத்த நம்பிக்கையும் நட்ட நடுவுல அம்மனமாத்தான் இருக்குது.
கோலு அஞ்சாயிரத்துக்கும் , பத்தாயிரத்துக்கும் வித்த நிலமெல்லாம் இப்போ 1 இலட்சம், 2 இலட்சம்னு நம்ம தலை கிர்ருன்னு சுத்த உச்சில போய் நிக்குது, வெறுங் கையோட பொழப்பு பார்க்க வந்த புரோக்கர்மாருங்க “ விலை நிர்னயம்” பன்னுற அதிகார வர்க்கமா ஆகிட்டாங்க, 10 பேர் தரகு பன்ன வேண்டிய இடத்துல 5000 பேர் இருந்தா மசு.... விளங்கும்,? இப்படித்தான் கடந்த காலங்களில் பல வியாபாரங்களை ஒன்னுமில்லாம ஆக்கி ஏராளமான குடும்பத்தின் வயித்துல சுட்டாங்க. 5 கோலு வீட்டுமனை வாங்க முடியாம சாமான்ய கீழக்கரைக்காரனை தெருவுல பிச்சையெடுக்க வைக்க முடிவு செய்யபோறாங்க, அதுவும் முடியாதவன் தூக்கில தொங்குறத விட என்னங்க செய்ய முடியும்.
ஒன்னுக்கும் உதவாத இடத்தையெல்லாம் காட்டி 5 லட்சம் 10 லடசம் கொடுத்து வாங்க வச்சி பல குடும்பங்களை அழிவுக்கு இழுத்து செல்லும் இந்த ரியல் எஸ்டேட் தரகர்களின் நெட்வொர்க்கை சீர்படுத்தவோ அல்லது புரோக்கர்களின் வலையில் சிக்கி அவர்களின் போதைக்கு ஊறுகாய் ஆகிற மக்களை காப்பாற்ற வேண்டுமென்றோ இதுவரை எந்த இயக்கமும், கோரவில்லை இவை குறித்துக் கவலைப்பட்டதுமில்லை. இப்போது சில ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆடம்பர வாழ்வின் செலவை மக்களின் தலையில் கட்டுபவர்களுக்கு கடிவாளம் கட்ட இனி ஒருத்தரு பொறந்துதான் வரனும் போல இருக்கு. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…..ன்னு பாடத் தோணுதா?
ஒன்னுக்கும் உதவாத இடத்தையெல்லாம் காட்டி 5 லட்சம் 10 லடசம் கொடுத்து வாங்க வச்சி பல குடும்பங்களை அழிவுக்கு இழுத்து செல்லும் இந்த ரியல் எஸ்டேட் தரகர்களின் நெட்வொர்க்கை சீர்படுத்தவோ அல்லது புரோக்கர்களின் வலையில் சிக்கி அவர்களின் போதைக்கு ஊறுகாய் ஆகிற மக்களை காப்பாற்ற வேண்டுமென்றோ இதுவரை எந்த இயக்கமும், கோரவில்லை இவை குறித்துக் கவலைப்பட்டதுமில்லை. இப்போது சில ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆடம்பர வாழ்வின் செலவை மக்களின் தலையில் கட்டுபவர்களுக்கு கடிவாளம் கட்ட இனி ஒருத்தரு பொறந்துதான் வரனும் போல இருக்கு. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…..ன்னு பாடத் தோணுதா?





8 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அருமையான செய்தி. யதார்த்தமான வாக்கிய நடையில் எழுதப்பட்டுள்ள உண்மையான செய்தி.
வஸ்ஸலாம்.
அன்புடன் சகோதரன்
ஜமீல் முஹம்மது.
வரவுக்கு மிக்க நன்றி சகோதரர் ஜமீல் முஹம்மது
article is good . can u explain what is mean undiyal ?
who is the author of this site ?
without information it ll create bad impression so please update your information.
kilaki murazu..unga article romba nalla iruku... kilakarai real estate brokeruku ithu seruppu adi..
yes kindly update your profile
தோழர்களே, கீழை முரசு என்பது தனிநபர் கருத்து அல்ல, சமூக அக்கரை கொண்ட பல சாமான்யர்களின் கருத்துக்களும், ஆதங்கங்களும் , கோபங்களும் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது, சமூக அநீதிகளை கண்டு நடுக்கம் கொள்பவர்களின் கருத்துக்களுக்கு இங்கு இடம் இல்லை,மறைந்திருக்கும் உடலை தேடுவதை விட்டு கருத்துக்களை அறியுங்கள், ஆட்சேபனைகளை தெரிவித்தால் திருத்திக்கொள்ளப்படும்.
கீழக்கரையின் அவல நிலையை களைய, நகர் சுகாதாரத்தை சீர் செய்ய தங்களுடன் எமது கருத்தினை பகிர்ந்து கொள்ள ஆவல் கொள்கிறோம்..
ம.த.மகன் , கீழக்கரை டைம்ஸில் தங்களின் கமெண்ட்களில் ஊரை பற்றிய தங்களின் ஆழ்ந்த அறிவினையும், சரியான ஆலோசனைகலளையும், இடித்துரைக்கும் பாங்கினையும் கன்டு வியந்திருக்கிறோம். வரவுக்கு மிக்க ன நன்றி
Post a Comment