Subscribe:

Ads 468x60px

Featured Posts

Sunday 9 June 2013

கீழக்கரையில் சுருட்டப்படும் கோடிகள் - சுகபோகத்தில் கொழிக்கும் மக்கள் பிரதிநிதிகள்…




 
 
கீழக்கரை நகராட்சியில் முறைகேடுகளுக்கு எதிராக  முகைதீன் இப்ராஹீமின் முயற்சியினால் கடந்த மாதம் இறுதியில் கீழக்கரை அணைத்து மக்கள் இயக்கங்கள், கட்சிகள், ஜமா அத்துக்கள் என அணைவரையும் ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சியின் 19 மாத கால சாதனை கீழக்கரை மக்களின் வேதனை என்ற புத்தகம் வெளியிடப்பட்டது  அதில் இந்த நகர் நிர்வாகம் பொறுப்பேற்ற  19 மாத காலத்தில் 7 கோடியே 64 லட்சம்  நிதியில் நடைபெற்ற திட்டப்பணிகள், அதை செய்த ஒப்பந்ததாரர்கள், அவர் செய்த பணிகள் குறித்து ஆய்வு, இதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.. இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில்,  நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கீழக்கரை நகராட்சியில் என்ன நடக்கிறது என்பதனை அறியும் போது  நமக்கு ஆச்சரியம் மேலிட்டு குருதி கொதிக்கிறது...
கீழக்கரை நகரின் வளர்ச்சி மற்றும் பொது திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நகரசபையின் அதிகார தளத்தில் செயலாற்றும் சக்திகள் பாரிய அளவில் முறைகேடுகள் நடத்தியிருப்பதும் , நகரின்  வளர்ச்சிப்பணிகளை கண் துடைப்பாக துவக்கி, 50 சதவீத வேலைகள்  கூட முழுமை பெறாத நிலையில், பணிகளுக்கான மொத்த தொகையயும்  காண்ட்ராக்டர்களுக்கு வழங்கி பின் அவர்களிடமே அந்த நிதியை வாங்கும் ஆழிய மோசடி வேலைகளில் ஈடுபடுவதாகவும், சுருட்டப்பட்ட மக்கள் நிதியை கூட்டாக பல பிரதிநிதிகள் பிரித்துக் கொண்டு சுகபோகத்தில் கொழிப்பதாகவும்,  கீழக்கரையின் வளர்ச்சி பணிகள் பாதி முடிவடைந்த நிலையில் அம்போவென… நிற்பதாகவும் அறிய முடிகிறது.
கீழக்கரையில் திட்டப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் காண்ட்ராக்டர்களுக்கு செட்டில் செய்யப்பட்ட நிலையில், 50 சதவீத பணிகள் கூட நிறைவேறவில்லை, அப்படி நிறைவேறி இருப்பதாக ஆதாரத்துடன் தெரிவித்தால் என் நகர்மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என முகைதீன் இப்ராஹீம் வெட்ட வெளியில் சவால் விடுகிறார். இல்லாத வாயிலுக்கு கதவு போட்ட  மோசடிப் பேர்வழிகள் இந்த சவாலை ஏற்க தயாரா? என கீழக்கரை மக்கள் கேட்கிறார்கள்.
  
 
யார் இந்த முகைதீன் இப்ராஹீம் ? கீழக்கரை நகர்மன்றத்துக்கு உட்பட்ட18 ஆவது வார்டு பகுதியிலிருந்து நகர்மன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர். இன்றைய இந்திய அரசியல் சூழலில்  ஊழலுக்கு எதிரான  நேர்மை மிகுந்த ஒரு தனி மனிதனின் குரலுக்கு என்ன மாதிரியான நெருக்கடிகள் கொடுக்கப்படும் என்பதை நாம் அறிவோம். அதை விட மேலான அழுத்தங்களும், அவதூறு பேச்சுக்களும், சட்ட நெருக்கடிகள், சஸ்பெண்ட் என  கடந்த 19 மாதங்களாக இந்த நகர்மன்ற உறுப்பினருக்கு டார்ச்சர் கொடுக்கப்பட்டு வருவதை கீழக்கரை மக்கள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது.

 
கீழக்கரை நகர்மன்றத்தின் அதிகார மையத்தில் இயங்கும் ஆதிக்க சக்திகள் இழைக்கும் தவறுகளை இடித்துரைத்தும், தட்டிக் கேட்டும், பொதுதளத்தில் வெளிப்படுத்தியும் தன்னந்தனியாக பல போராட்டங்களை முகைதீன் இப்ராஹீம் தொடர்ந்து நடத்திய  போதும் , கீழக்கரை மக்கள் மற்றும் அமைப்புசார்ந்த, அமைப்புசாரா  இயக்கங்களின் ( ஒரு சில அமைப்புகள், ஜமா-அத்துக்கள் தவிர) அலட்சிய போக்காலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கூட்டு களவாணித்தனத்தாலும், லஞ்ச, லாவண்யத்துக்கு எதிராக இவர் முண்ணகர்த்திய அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகிப்போனது. 
 

என்ன கொடுமை………… மக்கள் பிரதிநிதிகளாய் கீழக்கரை மக்களால் வலிந்து உருவாக்கப்பட்டவர்களின் வாயில்களில் மட்டும் ஊழல் எனும் சாக்கடை நீர் தறிகெட்டு பாய்ந்து, முழுதும் நிரம்பி, ததும்பி, மூக்கடைக்கும் வீச்சம் எடுத்து வருகிறது. எங்கே செல்லும் இந்த  நரகல் நிறைந்த பாதை என கீழக்கரை சமுதாயம் மூக்கை மூடி  முகம் சுழிக்கிறது.
 
முகைதீன் இப்ராஹீமின் கூற்றுப்படி, உள்ளபடியே சொல்வோமெனில் , கீழக்கரைக்கு 2012 – 2013 ஆண்டில் தமிழக அரசினால் ஒதுக்கப்பட்ட 8 கோடிக்கான நிதியில், மக்கள் நல மற்றும் கட்டமைப்பு பணிகளுக்காக ஏராளமான டெண்டர்கள் விடப்படுகிறது, குறிப்பிட்ட காலத்தில் நிறைவடைய வேண்டிய பணிகள் தகுந்த காரணமில்லாமல் உள் நோக்கத்துடன்  நீட்டிக்கப்படுகிறது, அல்லது அறை குறை வேலைகளுடன் வேலை சுத்தமாக நிறுத்தப்படுகிறது,  முழுமை பெறாத வேலையை முடிவடைந்த வேலையாக நம்ப வைக்கப்படுகிறது, சில வேலைகள் துவக்கப்படுவதாக படம் காட்டப்பட்டு ஒரே நாளில் முடிவடைய வைக்கப்படுகிறது. பின் ஒப்பந்த்தாரர்களுக்கு முழுப்பணமும் கொடுக்கப்பட்டு , பின் அவர்களிடம் இருந்தே திரும்ப பெறப்பட்டு கோடிகளில் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த உலகமகா மோசடி குறித்து வெளியிடப்பட்ட ஆதாரங்களை கீழே காணலாம்.

 
 
 
 
 

 
கொள்ளையிட்ட பணத்தினை தேவைக்கேற்றவாறு பல் இளிக்கும் பல நகர் உறுப்பினர்களுக்கு எலும்பு துண்டுகளாய் வீசி எறியப்படுகிறது. ஆப்பத்தை பங்கு போட்ட பின்ந்தின்னி குரங்குகள் வாயை கட்டிக்கொண்டு அடுத்து எப்ப வரும் என பெருமாள் கோயில் வாயிலில் பிச்சை எடுக்கும் பாங்கோடு காத்துகொண்டிருக்க வேண்டியது.. காசு வாங்க மறுக்கும் யோக்கியவான் எவனாவது சிக்கினால் அவனை கிறுக்கன், பொழைக்க தெரியாதவன், என்ற வசவு மொழிகளால் அர்ச்சித்து விரட்ட வேண்டியது..
 

அறிவார்ந்த கீழக்கரை சமுதாயமே, அரசியல் விழிப்புணர்ச்சியில் உயர பறந்து கொன்டு இருப்பதாக கூறிக் கொள்கிற்கிறோமே ஒழிய, இந்த கூட்டு களவாணிக் கூட்டத்தால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டு பாழாக்கப்படும் கீழக்கரையின் கதறலை அறியமாட்டீர்களா? களங்கப்படுத்தப்படும் கீழக்கரையின் ஆண்மாவை கவசமிட்டு காத்திட இந்த ஒரு முகைதீன் இப்ராஹீமால் மட்டும் முடியுமோ…. அய்யகோ…. நெஞ்சு பொறுக்குதில்லையே  இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்…… என மகா கவி  பாரதி  நம்மை போன்றோரை மனதில் வைத்துதான் பாடியிருப்பானோ?
தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், கீழ் நிலையில் ஆளும் மற்றும் அதிகார வர்கத்தை நம்பி தமது ஆட்சிக்கு நற்பெயரை சம்பாதிக்கும் நோக்கத்துடன், திட்டத் தொகைகளை வாரி வழங்குகிறார்கள், ஆனால் இவர்களோ அதனை அணுபவ பாத்தியமாக எண்ணி கொழித்து திளைக்கிறார்கள். மீண்டும் ஒரு காலம் வரும், ஆரத்தழுவி வாக்கு கேட்டு் மக்களிடம் இந்த கேடுகெட்டவர்கள் வருவார்கள்… அப்போது செருப்பால் அடிக்கும் நிலை வரும் இங்கே என  ஒரு சமூக ஆர்வலர் அன்று நடந்த கூட்டத்தில் பேசினார், அதற்கு முன் புரட்சித் தலைவி அம்மா தலைமையிலான தமிழக அரசு தன் சவுக்கை சுழற்ற வேண்டும் என்பதே கீழக்கரை மக்களின் வேண்டுகோள்...
 

Thursday 20 September 2012

இஸ்லாமியர்களின் கொந்தளிப்பின் உச்சத்தை அமெரிக்கா அளவிட நினைக்கிறதா?

முஸ்லீம் உலகினை கொந்தளிக்க வைத்த கேவல திரைப்படத்திற்கு இன்றும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசுக்கும், யூ ட்யூப் ஊடகத்தினை விலைக்கு வாங்கிய கூகுள் இனைய நிறுவனத்துக்கும் முஸ்லீம்களின் உணர்ச்சிகளை மொத்தமாக சீண்டிப் பார்க்கும் அபாயகரமான ஆவல் வந்து விட்டது. இதற்கான காரனம் என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள், அதன் மூலம் கிடைக்கப்பெறும் பலன் எதுவுமே இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

 எது எப்படி இருப்பினும், இவ்வுலகில் வாழ்ந்த ஒரு மகத்தான மாமனிதனும் , உலக இஸ்லாமியர்கள் தம் இதயத்தில் சுமந்து வாழும்  அருமை நாயகத்தின் மீது  இதுவரை இல்லாத அளவுக்கு அவதூறு சுமத்தப்பட்டு, கையறு நிலையில் மகா மோசமான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக வெட்கி தலை குனிய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இஸ்லாத்திற்கும், எம் பெருமானார் அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் மீதும் வாறி இறைக்கப்பட்ட அவதூறு  கருத்துக்களையும், விஷம பிரச்சாரங்ளையும் இஸ்லாத்தின் எதிரிகளால் மனம் போன போக்கில் கட்டவிழ்த்து விடுவது ஒன்றும் புதிதல்ல.
 ஆனால் இது அளவு கடந்தது. அறிவீனம் கொண்டது.
 
எல்லையில்லா அபத்தங்களை  திரைப்பட வடிவில்  வெளியிட்ட இஸ்ரேலிய குள்ள நரிகளும், எகிப்தில் வாழும் இஸ்லாமிய எதிரிகளும் உள்ளும் புறமும் ஆப்படிக்கப்பட்டு வண்டி ஏற்றப்படவேன்டிய மலக் கழிவுகள். உலக இஸ்லாமிய  நாடுகளின் எரிசக்தி்யினைனை முழுதும் உறிந்து  ஆணந்தமாய் ஏப்பம் விட்டு வாய் துடைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடியும், அவதூறு வீடியோ க்ளிப் என்ற மலத்தினை தன் தலையில் வைத்துக் கொண்டு துடைக்க மறுக்கும்   கொழுப்பெடுத்த கூகுளின் செயலும் மிகப் பெரும் சதிக்கு  வலை விரித்து எதற்காகவோ ஆதாயம் தேட முற்படுவது போல் தோன்றுவதாக உலக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இஸ்லாமியர்களின் சென்சிட்டிவ் ஏரியாவில் கை வைப்பதாக என்னி எம் பெருமானாரை கொச்சை படுத்திய அந்த இழிபிறவிகளின் நரகல்களுக்கு யூ ட்யூப் கொடுக்கும் முக்கியத்துவத்துவமும் புக்ழிடம் கொடுத்து, கைது செய்ய மறுக்கும் அமெரிக்க அரசும்  உலக இஸ்லாமியர்களையும், இறைதூதரையும்  நேரடியாகவே கேவலப்படுத்தி உலக இஸ்லாமிய சமுதாயத்திடம்  மல்லுக்கட்டி நீயா? நானா? பார்க்க கிளம்பி விட்டதாகவே தோண்றுகிறது, இந்த நீசச் செயலுக்கான விலையினை அனுபவிக்கவும், ருசிபார்க்கவும் நேரம் வந்துவிட்டதாகவே பலர் கருதுகின்றனர்.
 
இறதூதரின் வரலாறு என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த  கற்பனைகள் அனைத்தும் கடந்த காலங்களில் இஸ்லாமிய துவேசிகளினால் மனம் போன போக்கில் , கஞ்சா போதையின் உக்கிரத்தில், நிலைதடுமாறி புணயப்பட்ட போலிக் கதைகள், இவைகள் பார்ஸி மொழியிலும், உருது மொழியிலும் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டவை. இது தடை செய்யப்பட்ட கற்பனை கதை. இதனை வைத்து ஒரு நாய் புளுகு விட்ட திரைக்கதையை அங்கீகரிக்க துடிக்கும் அமெரிக்காவின் செயல் காலத்தின் கோலமா அல்லது உலகின் அவலமா? நாம் அறியோம்.
 
என்ன விளக்கமளித்தாலும் தனது  புறம்போக்கு கொள்கையினை  நிறைவேற்ற முயலும் இஸ்ரேலிய மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளின்  சமூகவிரோத புளுகு மூட்டைகள் கரை போய் சேராது,  திரும்பும் எதிர் காற்றில் இவர்கள் கரைந்து போவார்கள்  என்பது தின்னம் . அல்லா மிகப் பெரியவன்.

Saturday 25 February 2012

கீழக்கரையை பதறடித்த விஷ ஊசி கொலைகள்!


40 ஆண்டுகள் கடந்த பின்னும், இன்று நினைத்தாலும் முதுகெலும்பை சில்லிட வைக்கும், 1970 க்கும் 1972 க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த விஷ ஊசிக் கொலைகள் பற்றிய ஒரு பதிவுதான் இது. 9 பேர் அடங்கிய கொடிய கொலைகார கும்பல் சென்னையில் ஏழு தங்க வியாபாரிகளையும் , ஹவாலா பணபரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களையும் கடத்திச் சென்று, கொன்று 7 லட்சம் ருபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் பனத்தினை கொள்ளையிட்ட வரலாறுதான் இது..
கீழக்கரையை சேர்ந்தவர்கள் இந்த வழக்கில் கொலைசெய்யப்பட்டதால் , அந்த காலகட்டத்தில் கீழக்கரையே பெரும் பீதிக்குள்ளானது,. எல்லோரும் அறிந்த இந்த சம்பவத்தினை இந்த தலைமுறையினரும் அறிய வேண்டும் என்பதே நம் கட்டுரையின் நோக்கம். மறைந்த முன்னாள் தமிழக ஐ.ஜி. திரு அருள் அவர்கள் இந்த சம்பவத்தினை பத்திரிக்கைகள் விவரித்த செய்திகளின் குறிப்பின் அடிப்படையில் இதனை தொகுத்திருக்கிறோம்


1972, அக்டோபர் 24 ஆம் தேதி, சென்னை ப்ராட்வே லாட்ஜில் தங்கி இருந்த கீழக்கரை கிழக்குத் தெருவை சேர்ந்த 38 வயதான தைக்கா தம்பி திடீரென மாயமானார் , தைக்கத் தம்பி அப்பொழுது தன்னிடம் 10,000/- ரூபாய் வைத்திருந்தார். அதை தொடர்ந்து கவலையுற்ற அவரது மாமனார் செய்யது அஹ்மது கபீர் , சென்னை ஏழு கினறு காவல் நிலையத்தில் மருமகனை கானவில்லை என புகார் மனு கொடுத்தார். போலீஸ் விசாரணையில் துப்பு ஒன்றும் கிடைக்கவில்லை. இவரின் இந்த மனுவே இந்த தொடர் கொலைகளின் முடிச்சு அவிழ்வதவதற்கான தொடக்கமானது., இந்த வழக்கு 1973 ஆணடு ஜனவரி வாக்கில் சிபிசிஐடியின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது..

தைக்கத் தம்பி காணாமல் போன வழக்கை விசாரித்த சிபிசிஐடிக்கு விரைவிலேயே துப்பு கிடைத்து விட்டது., கீழக்கரையை சேர்ந்த முகமது தம்பி என்பவர் தைக்காத் தம்பியுடன் அதிகமாகச் சுற்றி வந்ததாக போலிஸுக்கு தகவல் கிடைத்தது. , கீழக்கரை சென்று முகமது தம்பியை போலிஸார் விசாரித்தார்கள். விசாரனையில் முகம்மது தம்பி கொடுத்த தகவல் என்னெவெனில் ”தைக்கா தம்பியும் நானும் நன்பர்கள், 1972 ஆம் ஆண்டு அக்டோபரில் காதர் என்ற மற்றொரு நன்பர் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி மற்றும் அவருடன் வந்த உதவியாளரிடமும் தன்னை அறிமுகப்படுத்தியதாகவும், அவர்கள் தன்னிடம் “ தங்க கடத்தலில்” ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டினால் தக்க சன்மானம் தருவதாக உறுதியாளித்த்தாகவும்” தான் செய்து வரும் சங்கு மற்றும் சிப்பிகள் வியாபாரத்தில் சரியான வருமானம் இல்லாத்தால், பனத்தாசையால் தனது நன்பர் தைக்காத் தம்பி 1972 அக்டோபர் கடைசி வாரத்தில் பெங்களூருக்கு தங்கம் கொன்று செல்வதை அறிந்து, காதரை அழைத்துக் கொண்டு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக நின்றிருந்த தைக்கா தம்பியை அடையாளம் காட்டியதாகவும், அப்பொழுதே தான் அவரை கடைசியாக பார்த்த்தாகவும் கூறினார்.

அதன் பின் போலீசுக்கு இந்த போலி கஸ்டம்ஸ் அதிகாரிகளை கண்டுபிடிப்பதில் பெரிய சிரம்ம் ஏற்படவில்லை, முதலில் மாட்டியவன் வைத்தீஸ்வரன் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவன். அவன் சென்னை ஜார்ஜ் டவுனில் மருந்துக்கடை நடத்தி வந்தான். அவன் மருந்துகள் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் நன்கு அறிந்தவன். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நடிகர், நடிகைகளுக்கு அவன் போதை மருந்துகளை சப்ளை செய்து வந்தான். வைத்தீஸ்வரனின் நண்பன் தாவுத். வெளிநாடுகளிலிருந்து கைக்கடிகாரங்களைக் கடத்தி விற்பதுதான் இவன் தொழில். இந்நிலையில், வைத்தீஸ்வரனுக்கு ஒரு சமயம் பண நெருக்கடி ஏற்பட தன் நண்பன் தாவுத்தை அவன் தொடர்பு கொண்டான். தாவுத் ஒரு யோசனை கூறினான். பலர் சட்ட விரோதமாகக் கள்ளக் கடத்தலில் ஈடுபடுகிறார்கள், கணக்கில் வராத கருப்பு பணத்தை வைத்திருக்கிறார்கள். நாம் அவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்க முடிவு செய்யப்படுகிறது.


வைத்தீஸ்வரனுக்கு இந்த யோசனைப் பிடித்திருந்தது. செயலில் இறங்கினார்கள்.இருவர் மட்டும் செய்து முடிக்கும் காரியம் இல்லை. நம்பத் தகுந்த கூட்டாளிகள் தேவைப்பட்டனர். பார்த்தசாரதி, வேணுகோபால், அயுப்கான், கண்ணன் ஆகிய நண்பர்களுடன் பேசி, பண ஆசை காட்டி அவர்களையும் தன் கூட்டத்தில் சேர்த்தான் வைத்தீஸ்வரன். அவர்கள் அனைவரும் போலி சுங்கத் துறை அதிகாரிகளாக மாறினர். ஆனால் அவர்களுக்கு கள்ளக் கடத்தல்காரர்களைப் பற்றியும் ஹவாலாவில் ஈடுபடுபவர்கள் பற்றியும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றியும் தகவல் கொடுக்க வேண்டும் அல்லவா? இந்த வேலையைச் செய்ய பிராட்வே ஹோட்டலில் ரூம் பாயாக வேலை பார்த்த தன் நண்பன் ஜபருல்லாவை நாடினான் அயுப்கான். ஜாப்பருல்லாவுக்குத் துணையாக பிராட்வே ஹோட்டலில் வேலை பார்த்த அவனுடைய நண்பன் மஜீத்தும் சேர்ந்துகொண்டானர்.

முதலில் சிக்கியது வடிவுள்ளான் செட்டியார். மலேசியாவில் வியாபாரம். தன்னுடய ஹவாலா பரிவர்த்தனையை முன்னிட்டு ஹோட்டல் பிராட்வேயில் தங்கியிருந்தார். ரொக்கமாக 1,50,000/- கையில் வைத்திருந்தார். 1970களில் அது மிகப் பெரிய தொகை. மஜீத்தும் ஜாப்பருல்லாவும் சரியான சமயத்தில் தகவல் கொடுத்தனர். போலி சுங்கத் துறை அதிகாரிகள் ஹோட்டலின் உள்ளே நுழைந்தார்கள். செட்டியாரை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கவேண்டும் என்று கூறி அவரை ஒரு டாக்ஸியில் ஏற்றினார்கள். டாக்ஸியை ஓட்டியவன் கோபால். இவனும் வைத்தீஸ்வரன் கூட்டத்தைச் சேர்ந்தவன். டாக்ஸி புறப்பட்டது. வைத்தீஸ்வரன் மருந்துக் கடையிலிருந்து கொண்டு வரப்பட்ட தூக்க மாத்திரைகளைச் செட்டியார் வாயில் வலுக்கட்டாயமாகத் திணித்தான. நான் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தேன் என்று செட்டியாரிடமிருந்து ஒரு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டார்கள்.செட்டியார் அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் சுயநினைவை இழந்தார். செட்டியாரிடமிருந்து அவர் கொண்டுவந்த ரூபாய் 1,50,000/- கொள்ளை அடிக்கப்பட்டது. அவரது கையிலிருந்த கைக்கடிகாரம் எடுக்கப்பட்டது. செங்கல்பட்டுக்கு அருகாமையில் வேகமாக சென்று கொண்டிருந்த காரிலிருந்து செட்டியார் தள்ளிவிடப்பட்டார்.

புதருக்கடியில் செட்டியார் பரிதமாக விழுந்து கிடந்தார். கிராமவாசிகள் அவரைச் செங்கல்பட்டு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் செட்டியாருக்கு நினைவு திரும்பவில்லை. இரண்டு நாள்கள் கழிந்து அவர் இறந்துவிட்டார். செங்கல்பட்டு காவல் நிலையம் வழக்கு பதிவு செய்தது. செட்டியாரின் சட்டை காலரிலிருந்த லேபிளின் அடையாளத்தை வைத்து அவருடைய வசிப்பிடத்தை கண்டுபிடித்தனர். ஆனால் போலீசாரால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கொள்ளை அடித்த பணத்தில் வைத்தீஸ்வரன், பார்த்தசாரதி, வேணுகோபால், அயுப்கான் ஆளுக்கு தலா 30,000/- ரூபாய் எடுத்துக் கொண்டனர். மீது தொகையை தாவுத், மஜீத் மற்றும் கோபால் ஆகிய மூவரும் பங்கு போட்டுக் கொண்டனர். முதல் முயற்சியிலேயே வெற்றியையும், அதிகப் பணத்தையும் ருசி பார்த்த வைத்தீஸ்வரன் கும்பல் இன்னுமொரு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தது. .


இவர்களிடம் இரண்டாவதாக சிக்கியவர் ஷாஹுல் ஹமிது. மலேசியாவில் தொழில் புரிந்து கொண்டிருந்தவர். 1971ஆம் ஆண்டு தன்னுடைய சுற்றத்தார்களைப் பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தார். கையிருப்பில் 55,000/- வைத்திருந்தார். ஷாஹுல் ஹமீதின் போதாத வேளை,அவரும் செட்டியார் தங்கிய அதே ஹோட்டலில் தங்கினார். உடனடியாக தகவல் சென்றது. போலி சுங்கத் துறை அதிகாரிகள் ஷாஹுல் ஹமீதை வழிமறித்தார்கள். அவரை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு, ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஏசி அறை எடுத்து அங்கு தங்க வைத்தனர். பின்னர் அவருக்கு உண்மையை வெளிப்படுத்தும் பெத்தடின் ஊசி போடுவதாகக் கூறி அதிக அளவில் செலுத்தினார்கள். சுய நினைவை இழந்தார் ஷாஹுல் ஹமீத். அவரை ஒரு காரில் ஏற்றி ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரிப்பட்டு என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர் கழுத்தை நெரித்துக் கொன்றனர். காரை ஓட்டிச் சென்றவன் லஷ்மணன். இவனும் வைத்தீஸ்வரன் கும்பலைச் சேர்ந்தவன். ஷாஹுல் ஹமீதிடமிருந்த பணத்தையும் பொருள்களையும் எடுத்துக்கொண்டு, அவர் உடலை ஒரு மரத்தில் தொங்கவிட்டனர். அவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்று மற்றவர்கள் நினைப்பதற்காக.

இரண்டாவது முறையும் வெற்றி. இதனைக் கொண்டாட முடிவெடுத்தார்கள். விருப்பப்படி செலவழித்தார்கள். உல்லாசமாக வளைய வந்தார்கள். கொள்ளை கும்பலைச் சேர்ந்த வேணுகோபால் திடீர் பணக்காரன் ஆனதைக் கவனித்த அவனுடைய நண்பன் தக்ஷிணாமூர்த்தி கவனித்துவிட்டான். சுங்க இலாகாவுக்குத் தகவல் அளிக்கும் வேலையை ரகசியமாகச் செய்து வருபவன் என்பதால் தன் நண்பனைப் பற்றியும் அவன் தகவல் கொடுத்தான். அவன் கொடுத்த தகவலின் பேரில் சுங்க இலாக்காவினர் வேணுகோபாலின் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு அவர்களால் கள்ளக் கடத்தல் பொருட்கள் எதனையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்ய முடியவில்லை. ஆனால், வடிவுள்ளான் செட்டியார் வைத்தீஸ்வரன் கும்பலுக்காக எழுதிக் கொடுத்த கடிதம் சிக்கியது. ஆனால் அதை அவர்கள் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தக்ஷிணாமூர்த்தியால் தனக்கு ஏற்பட்ட தொல்லைகளைத் தன் கும்பலிடம் தெரிவித்தான் வேணுகோபால். திட்டம் தயாரானது. பெங்களூருக்கு ஓர் உல்லாசப் பயணம் போய் வரலாம் என்று தக்ஷிணாமூர்த்தியை நயவஞ்சகமாக அழைத்தான் வேணுகோபால். அவனும் தனக்கு வர இருக்கும் ஆபத்தை உணராமல் சம்மதித்தான். கார் பெங்களூர் புறப்பட்டது. காரை ஓட்டியது பார்த்தசாரதி. அந்தக் காரை மற்றொரு காரும் பின் தொடர்ந்தது. அதில் லஷ்மணன், அயுப் கான் மற்றும் கோபால் பயணம் செய்தார்கள். ஓரிடத்தில் தக்ஷிணாமூர்த்தி, வேணுகோபால் மற்றும் பார்த்தசாரதியால் காட்டுத்தனமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டான். தக்ஷிணாமூர்த்தியின் உடல் காரிலிருந்து இறக்கப்பட்டு, சித்தூருக்கு செல்லும் வழியில் ஒரு பாலத்தின் அடியில் கொண்டு செல்லப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்டது.
தக்ஷிணாமூர்த்தியின் உறவினர்கள் அவரைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் துப்பு ஒன்றும் துலக்கப்படவில்லை.

இதற்கிடையில் அயுப்கானுக்கு காதர் என்பவனின் தொடர்பு கிடைத்தது. காதரை வேணுகோபால் மற்றும் பார்த்தசாரதியிடம் அறிமுகப்படுத்தினான். அவர்கள் சுங்க இலாக்கா அதிகாரிகள் என்றும் அவர்களுக்கு உளவுத் தகவல் கொடுத்தால் சன்மானம் உண்டு என்றும் வலை விரித்தான். அது உண்மைதான் என்று நம்பிய காதர், தனது முதல் உளவுத் தகவலை அவர்களிடம் தெரிவித்தான். காயல்பட்டினத்தைச் சேர்ந்த புகாரி தம்பி. விஷ ஊசி கும்பல் காதருக்கு நாள் குறித்தது. ஒரு நாள், புகாரி தம்பி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் ஏறுவதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். வழிமறித்த கும்பல், வழக்கமான பல்லவியைப் பாடி புகாரியை காரில் அழைத்துச் சென்றது. வழக்கம் போல் ஊசி போட்டு, கழுத்தை நெரித்து கொன்று போட்டார்கள். பிறகு அவரிடம் இருந்த 55 ஆயிரத்தை கொள்ளையடித்து., அவரின் உடல் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வீசியெறியப்பட்டது. தகவல் கொடுத்து உதவிய காதருக்கு 10,000/- ரூபாய் வழங்கப்பட்டது.. வெகுமதி பெற்ற காதருக்கு ஒரே சந்தோஷம்! தனக்குக் கிடைத்த அத்தனை தகவல்களையும் அவன் விஷ ஊசி கும்பலுக்கு எடுத்துச் சென்றான்.

காயல்பட்டினத்தை சேர்ந்த இலங்கையில் தொழில் புரியும் சதக் இப்ராஹிமை சென்னை எக்மோர் பஸ் நிலையத்தில் வைத்து கட்த்தி, கொன்று அவரிடம் இருந்த 60 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்ட்து, பின் அவர் உடல் பழமனேறி மலை பகுதியில் வீசப்பட்ட்து..


அடுத்து சிங்கப்பூரில் இருந்து சம்பாதித்து விட்டு திரும்பிய காரைக்காலை சேர்ந்த முகமது சாலிக் நாகப்பட்டினம் செல்ல காத்திருந்தவரை அதே பானியில் கட்த்தி கொன்று அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையிடப்பட்டு, அவரின் உடலை ஆந்திராவின் புத்தலாபேட்டை பகுதியில் வீசப்பட்ட்து

காதரின் ஒவ்வொரு தகவலும் கொலையில் முடிந்தது. ஒவ்வொன்றுக்கும் சன்மானம்.இதன் தொடர்ச்சியாகத்தான் நாம் ஆரம்பத்தில் பார்த்த தைக்கத் தம்பி பற்றிய தகவலையும் காதர்தான் கொடுத்தான். தைக்கத் தம்பி தங்கம் கடத்துகிறார் என்பதுதான் காதர் கொடுத்த தகவல். விஷ ஊசி கும்பல் தைக்கத் தம்பியை பெங்களூரு வரை தொடர்ந்து சென்றது, கன்ன்ன் தைக்கா தம்பியை நிழலாக தொடர்ந்தான். மற்றவர்கள் பெங்களூருக்கு காரில் பயனம் செய்தனர். இரண்டு நாட்கள் தொடர்ந்த பின் அங்கு அவர் ஒரு பேருந்தில் ஏறும் தருவாயில், வழிமறித்து, கடத்தி, ஊசி போட்டு, கொன்று, 23 தங்க கட்டிகளையும் பணத்தையும் கொள்ளை அடித்தார்கள். தைக்கத் தம்பியின் உடல் வெங்கடகிரி மலைப் பகுதியில் உள்ள ஒரு குட்டையில் வீசப்பட்டது..


காதர் மூலமாக போலீஸ் விஷ ஊசி கும்பலின் முக்கிய நபர்களைப் பிடித்தது. வேணுகோபால் நீதிமன்றத்தில் சரணடைந்தான். அவன் அப்ரூவராக மாறி போலீஸுக்கு வாக்குமூலம் கொடுத்தான். போலீஸ் குற்றவாளிகளிடமிருந்து 3,00,000/- ரூபாய் ரொக்கம், வெளிநாட்டு நாணயங்கள், தங்கக் கட்டிகள், தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் என்று ஏகப்பட்ட பொருள்களைக் கைப்பற்றினர். விசாரணை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என்று வெளிநாடுகளிலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நடந்தது. விசாரணை முடிந்து குற்றவாளிகளின்மீது கூட்டுச் சதி, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. 263 பேர் சாட்சியம் அளித்தனர். 672 ஆதாரங்கள் குறியீடு செய்யப்பட்டன. இறுதியில் வைத்தீஸ்வரன், பார்த்தசாரதி, லஷ்மணன், கண்ணன் ஆகியோருக்குத் தூக்கு தண்டனையும்; தாவுத், அயுப்கான், மஜீத் மற்றும் கோபால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது நீதிமன்றம். குற்றவாளிகள் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால் தாவுத் மற்றும் அயுப்கானின் ஆயுள் கால தண்டனை, 7 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது. மஜீத்தின் ஆயுள் தண்டனை 5 ஆண்டு கால சிறைத் தண்டனையாகவும், கோபாலின் ஆயுள் தண்டனை 2 ஆண்டு கால சிறை தண்டனையாகவும் குறைக்கப்பட்டது..
தூக்கு தண்டனைக் கைதிகள் இந்திய ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். கருணை மனு மீது அரசாங்கம் பல வருடங்கள் ஆகியும் முடிவெடுக்காத நிலையில், தூக்கு தண்டனைக் கைதிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகி அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ரிட் மனு தாக்கல் செய்தனர். ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை அரசாங்கம் காலதாமதப்படுத்தியதால், கைதிகளுக்கு அதிக மன உளைச்சலை ஏற்பட்டிருப்பதாகக் கூறி, இது அவர்களுடைய அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்றும் அவர்களுடைய தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவேண்டும் என்றும் தீர்ப்பானது..


Tuesday 7 February 2012

ஊழல் பெருச்சாளியான கீழக்கரை வி.ஏ.ஓ முருகேசுவின் கடைந்தெடுத்த களவாணித்தனம்....


கீழக்கரையில குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கிறது, வாருகாலு உடைந்து சாக்கடைகள் பெருக்கெடுத்து ஓடுது, ஊருக்குள்ளேயே நுழைய முடியவில்லை, நாத்தம் குடல புடுங்குது... என காட்டுக் கத்தல் விடும் நம்ம மக்கள் இதையெல்லாம் விட நாற்றமெடுக்கும் நம்ம ஊருல இருக்குற ஊழல் நதியின் ஊற்றுமூலமான அரசு அலுவலகங்களை பற்றி ஒன்னுமே பேசுவதில்லை. அந்த ஊழல் ஊற்றிலிருந்து வழிந்தோடும் நாற்றமெடுக்கும் சாக்கடையான கீழக்கரை வீ.ஏ.ஓ முருகேசனை பற்றி அறிவார்களா? மக்களை சுரண்டி பிழைக்கும் இந்த முருகேசன் தான் கீழக்கரையில் முதன்முதலில் தூர்வாற வேண்டிய சாக்கடை. எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கி நாளொரு மேனியும், பொழுதொறு வண்ணமுமாய் உப்பிப் பெருக்கும் இந்த பெருச்சாளியால் அன்றாடம் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதை எவரும் ஏறிட்டுப்பார்ப்பதில்லை. கொடுத்து சிவந்த கையல்லவா கீழக்கரை மக்களின் கைகள்!




கொஞ்சம் காலமா இந்த ஊழல் பெருச்சாளி பன்னும் அடாவடிக்கும், அட்டூழியத்திற்கும் வரையறையே இல்லை, மாற்றுத் திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தில் பயனடைபவர்களுக்கு ரூ. 2000, விதவைகள் உதவித்திட்டத்தில் மாதத் தொகை பெறுபவர்கள் மொதல் மாசம் தொகை ரூ 1000 த்தை அய்யாவுக்கு காணிக்கை கொடுக்கனுமாம், பாஸ்போர்ட் வெர்ஃபிகேசனுக்கு போலீஸ்ல கேட்கிற அட்ரஸ் ப்ரூஃபுக்கு ரூ 200 , சாதி சான்றிதழ் மாதிரி பெரிய மேட்டருக்கு ரூ 5000 என தனி தனியா இந்த களவாணி ரேட்டு வச்சிருக்கிறதா தலையாரிதான் சொல்றாரு... கீழக்கரைக்கு வந்து ஒரு , இரண்டு வருஷம்தான் இருக்குமாம், பேனாவை எடுத்தாத்தான் வேலை நடக்கும், ஆனால் இவர் கையில மீட்டர் வந்தாதான் மேட்டர் நடக்குமாம். .




தாலி அறுத்த பொம்பளைக்கு கிடைக்குற பனத்திலயும், குருடு, செவிடுங்களுக்கு அரசாங்கம் கொடுக்குற உதவிகளிலும் அன்றாடம் தன் கடமைகளை செய்வதற்கும் லஞ்சம் வாங்கும் இது போன்ற ஈனப்பிறவிகளின் பினத்தை ஈ கூட மொய்க்குமா எனபது சந்தேகமே, இந்தியன் தாத்தா மாதிரி யாராவது ஒருத்தர் வந்தாத்தான் இவரு அடங்குவாருன்னும புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இரண்டு இளைஞர்கள் பேசிக்கிட்டாங்க. இந்த பெருச்சாளி அரசாங்கத்தின் வலையில மாட்டுமா அல்லது இதோட பொந்து இன்னும் பெருசாகிகிட்டே போகுமான்னு பொறுத்திருந்து பார்ப்போமே!

Wednesday 1 February 2012

சமூக மதிப்புகளை அழிக்கும் பொறுக்கிகளின் வேட்டிக்குள் வேட்டு.....கொல.. வெறியில் சமூக ஆர்வலர்கள் - குத்பா கமிட்டி அதிரடி முடிவு....









கீழக்கரை சமூகத்தின் தனித்துவமான சமய, சமூக, கலாச்சார மதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதுடன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருவதையும்,கடந்த காலத்தில் நாம் இழந்த சமூக விழுமியங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சில புரட்சிகர இளைஞர்கள் அனைத்து ஜமாஅத்துக்களுடன் கலந்து பேசி வருவதையும் கீழைமுரசு வாசகர்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தது.


இந்த முயற்சிகளை தொடர்ந்து, இன்று காலை கீழக்கரை பைத்துல்மாலில் குத்பா கமிட்டியின் கூட்டம் , கமிட்டியின் தலைவர் செ.மு. ஹமீது அப்து காதர் தலைமயில் நடை பெற்றது, கீழக்கரையின் 8 ஜமாஅத்தை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பைத்துல்மால் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பினர்களாக கீழை புகாரி, கீழை முஜிப், ஹுசைன், கன்மனி அலி, அப்துல் ஹமீது, உட்ட்பட சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக சாதாரன விஷயங்களை மட்டுமே அலசும் இந்த கூட்டத்தில், இன்று அனல் கக்கும் விவாதங்கள் தெறித்தது. சகோ. புஹாரி மற்றும் சகோ. அப்துல் ஹமீது ஆகியோர்கள் நெருப்பு பிழம்பாக மாறி பேசினர்.



குறிப்பாக கீழக்கரையில் அரங்கேற்றப்படும் இஸ்லாத்திற்கு எதிரான, அறுவறுப்பான கலாச்சார சீரழிவுகளின் போக்கு, ஜமாஅத்துக்களின் கையறுபபட்ட நிலை, கலாச்சார சீரழிவுகளை அங்கீகரிக்கும் நம் மக்களின் மன மாற்றம், எல்லைமீறி போகும் அனாச்சாரங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மானவ சமுதாயத்தை சீரழிக்க புறப்பட்டிருக்கும் சமூக பொறுக்கிகள், அவர்களின் தொழில், சமுதாயத்தில் பதமாய் கலந்து கீழக்கரையின் கலாச்சார மதிப்புக்களை உறிஞ்சி சக்கையாய் துப்பும் நஞ்சுகள், பணத்தால் அவலங்களை மறைக்கும் பரிதாபம், ஆகிய சீர்கேடுகளை பற்றி பேசினார்கள், மேலும், சமீபத்தில் நடைபெற்ற சம்பவஙகளை நம்மை சுற்றி கண்டும் கானாமல் விட்டுவிட்டால் எதிர்கால சந்த்தியினருக்கு நாம இந்த கேடுகெட்ட செயல்களுக்கு அங்கீகாரம் வழங்கிவிடும் சரித்திரப் பிழையை செய்துவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். நிகழ்வுகளின் சூழ் நிலை உணமையை அறிந்து கொண்டு இதுவரை கீழக்கரை வரலாறு கண்டிராத கீழ்காணும் அதிரடி முடிவு குத்பா கமிட்டி எடுத்து இருக்கிறது.


இனி வரும்காலங்களில் சமூக மதிப்பீடுகளை வலுவிழக்க செய்யும் சம்பவங்கள் ஜமாஅத்துக்களின் மூலமே , தீர்க்கப்படும் எந்த கட்சியோ, இயக்கமோ, தனிநபர்கள் அமைப்போ இந்த் விஷயத்தில் தலையிட அனுமதிக்க முடியாது, இது போன்ற விஷயத்தில் ஜமாத்துக்களின் முடிவே இறுதியானது.


இந்த விஷயங்களை கண்காணிக்க மற்றும் ஆராய “அனைத்து ஜாமாத்துக்கள் கூட்டமைப்பு ’ வழிநடத்துதலின் கீழ் கண்கானிப்பு குழு அமைக்கப்படும், ஓவ்வொரு ஜமாத்துக்களில் இருந்து 3 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இதன் தலைவராக “குத்பா கமிட்டியின்” தலைவரே செயல்படுவார்.



மானவர்களை பள்ளி, மற்றும் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும், வேன்கள்,ஆட்டோக்கள் ஆகியவை ஜமாஅத்துக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும், மேலும் ஜமாஅத் குழுக்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் இந்த வாகனங்கள் கொண்டு வரப்படும்.


மேலே சொல்லப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்த குழு இனி மாதம் ஒரு முறை கூடி விவாதிக்கும் என கூறப்பட்டிருக்கிறது, ஜமாஅத்துக்களின் இந்த ஒருங்கினைப்புத் திட்டம், அறியாமை உள்ளங்களில் விஷ விதை நட்டு சொகுசாய் காய்பறித்து குசு விடும் பண்டார நாய்களின் வேட்டிக்குள் வேட்டு வச்ச மாதிரி ஆகிடுச்சுன்னு ஊர்ல பேசிக்கிறாங்க.. உண்மைதான் நாங்களும் “கொலை வெறி” லதான் இருக்கிறோம்.

Friday 20 January 2012

கீழைமுரசில் வெளிவந்த ஆம்புலன்ஸ் செய்தி – பிட் நோட்டீஸாக விநியோகம்...

சமூக அக்கரை கொண்ட கீழக்கரை பொதுமக்களில் சிலர் நம் கீழைமுரசில் வெளிவந்த ஆம்புலன்ஸ் செய்தியை இன்று 20.01.2012 வெள்ளிக்கிழமை குத்பாவிற்கு பின் பிட் நோட்டிஸ் வடிவில் மக்களுக்கு விநியோகித்தார்கள். கீழைமுரசின் சார்பில் அந்த தோழர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday 19 January 2012

ஆம்புலன்ஸ் விவகாரம் – பலிகடாவான செல்வராஜ் மேஸ்த்திரி…





கடந்த வாரம் கீழக்கரையில் ஆம்புலன்ஸ் சேவையின் லட்ச்சனத்தை ” டப்பாவான ஆம்புலன்ஸ்” என்ற கட்டுரையில் கீழை முரசு விளித்து எழுதி இருந்தது, அதன் நோக்கமே அதில் சம்பந்தப்பட்டவர்கள் வினை செய்யவேண்டும் என்பதே, கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு நேற்று கீழக்கரையில் இரண்டு உயிர்கள் பலிகிடாவாக்கப்பட்டிருக்கிறது, என்ன நடந்தது? செல்வராஜ் மேஸ்த்திரி, கிழக்குத் தெருவில் எல்லாரும் அறிந்த ”கட்டிட கொத்தனார்” , புதுக்கிழக்கு தெரு பகுதியில் நேற்று கட்டுமான பனியில் ஈடுபட்டிருந்த போது “எதிர்பாராத இடிபாட்டில்” சிக்கி படுகாயமடந்து இருக்கிறார், அவருடன் ஒரு கூலித் தொழிலாளியும் காயம்பட்டு மோசமான நிலையில் இருந்திருக்கிறார்.




ஒரு குறிப்பிட ஆம்புலன்ஸை அழைத்து இருக்கிறார்கள் ‘ இதோ வருகிறோம், அதோ அங்கே வந்து விட்டோம் என்று ரீல் விட்டு இருந்து இருக்கிறார்கள், பின் சரியாக 1 மனி நேரம் கடந்த பின் “ வண்டி பஞ்சர்” என்ற பதில் வந்திருக்கிறது, பிறகு 108 ஆம்புலன்ஸை அழைத்து அதுவும் வருவதற்கு கனிசமான நேரத்தை எடுத்திருக்கிறது, காலதாமதத்தால் கூலித் தொழிலாளி இறந்துவிட்டார், உயிர் ஊசலாட மதுரைக்கு எடுத்து செல்லப்பட்ட செல்வராஜ் மேஸ்த்திரி இன்று பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார். இது போல் இன்னொருவரை கொன்று இரத்த ருசி பார்க்கும் முன் செயலில் இறங்குவார்களா?